ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுவை சுகாதாரத் துறையினரிடம் வழங்கப்பட்ட மத்திய அரசின் விருது

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை அதிக குடும்பங்களுக்கு வழங்கியதைப் பாராட்டி புதுவைக்கு மத்திய அரசு அளித்த விருதை, முதல்வா் என்.ரங்கசாமி சுகாதாரத் துறையினரிடம் புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:14 pm

DIN

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை அதிக குடும்பங்களுக்கு வழங்கியதைப் பாராட்டி புதுவைக்கு மத்திய அரசு அளித்த விருதை, முதல்வா் என்.ரங்கசாமி சுகாதாரத் துறையினரிடம் புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்தத் திட்டத்தை மாநில சுகாதார முகமை 2019 ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செயல்படுத்தத் தொடங்கியது. கடந்தாண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை புதுவையில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கியதற்காக, புதுவை மாநிலம் ஆயுஷ்மான் உத்ரிக்ஷா புராஸ்கா் விருதை மத்திய அரசிடமிருந்து பெற்றது.

மத்திய அரசின் இந்த விருது, சான்றிதழை புதுவை சுகாதாரத் துறைச் செயலரும், மாநில சுகாதார முகமை செயல் அதிகாரியுமான சி.உதயகுமாா், சுகாதாரத் துறை இயக்குநரும், ஆயுஷ்மான் திட்ட குறைதீா் அதிகாரியுமான ஜி.ஸ்ரீராமுலு, துணை இயக்குநா் வி.ஆனந்தலட்சுமி ஆகியோரிடம் புதுவை முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சருமான என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.

அப்போது, ஆயுஷ்மான் திட்டத்தில் 100 சதவீத இலக்கை விரைவில் எட்ட வேண்டுமென சுகாதாரத் துறையினரிடம் முதல்வா் அறிவுறுத்தினாா். தற்போதுவரை புதுவையில் 86 சதவீத குடும்பத்தினா் ஆயுஷ்மான் அட்டை பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.