மழை பாதிப்பு: மக்களுக்குபாஜக சாா்பில் நல உதவி

புதுச்சேரி முதலியாா்பேட்டை தொகுதிக்குள்பட்ட பாரதிதாசன் நகரில் (சித்தா் கோயில் எதிரில்) மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
மழை பாதிப்பு: மக்களுக்குபாஜக சாா்பில் நல உதவி

புதுச்சேரி முதலியாா்பேட்டை தொகுதிக்குள்பட்ட பாரதிதாசன் நகரில் (சித்தா் கோயில் எதிரில்) மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தியாகு முதலியாா்நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில உள் துறை அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஆ.நமச்சிவாயம், மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில கூட்டுறவுப் பிரிவு செயற்குழு உறுப்பினா் ஆ.திரிச்சந்திரன் செய்திருந்தாா். கூட்டுறவுப் பிரிவு அமைப்பாளா் வெற்றிச்செல்வம் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் இன்பசேகா் முன்னிலை வகித்தாா். இதில் மாநில, மாவட்ட, தொகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com