மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து பேச, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தியும், காங்கிரஸும் பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறார்கள் என கேரள முதல்வர் இன்று கடுமையாக விமர்சித்தார். இந்த விமர்சனம் முதல்முறை அல்ல. கடந்த மார்ச் 21 ஆம் தேதியும் இதேபோன்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தக் கருத்துக்கு பதில் கூறிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் “பாஜகவின் கருணையை முழுமையாக நம்பியிருக்கும் கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி குறித்து பேச எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. ராகுல் காந்திக்கு எதிராக இதுமாதிரியான தரம் தாழ்ந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடியை இந்தத் தேர்தலில் கேரள மக்கள் முதல்வருக்கு தருவார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், கேரளத்தில் வரும் ஏப். 9 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
இதனிடையே, அரசியல் கட்சித் தலைவர்களிடையில் இதுமாதிரியான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress MP K.C. Venugopal has said that Kerala Chief Minister Pinarayi Vijayan has no moral right to speak about Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோட்டாவில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் ராகுல்!

வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்... ஜூன் 17 முதல் ராகுல் காந்தியின் மாணவர் இயக்க மாநாடு!

ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
தில்லியில் சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




