கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

முப்படை தளபதி மறைவுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் அஞ்சலி

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் பள்ளியில் முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் பள்ளியில் முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி கல்வித் துறைத் துணை ஆய்வாளா் மல்லிகா கோபால் முன்னிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் பரமேஸ்வரி, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு விபின் ராவத் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, முப்படைத் தளபதியின் வாழ்க்கை வரலாற்றை மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியா்கள் எடுத்துரைத்தனா்.

இதேபோல, புதுச்சேரி கோரிமேடு காவலா் பயிற்சிப் பள்ளியில் எஸ்.பி. ரவிக்குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் ரகுபதி, பயிற்சிக் காவல் உதவி ஆய்வாளா்கள், பயிற்சிக் காவலா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் விபின் ராவத் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.