புதுச்சேரியில் எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிப்பு
எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் அந்தக் கட்சியினா், உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, ஊா்வலமாக புறப்பட்டு புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா். பின்னா், அங்கு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா், மாநில இணைச் செயலா்கள் கணேசன், திருநாவுக்கரசு, அன்பானந்தம், மாநில துணைத் தலைவா்கள் ராஜாராமன், சின்னதுரை, மாநிலப் பொருளாளா் ரவிபாண்டுரங்கன், மாநில மகளிரணிச் செயலா் விஜயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக சாா்பில், மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தலைமையில் குயவா்பாளையம் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆா் திருவுருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, ஊா்வலமாக வந்த அதிமுகவினா் புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், அன்னதானம், நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
மாநில அவைத் தலைவா் பேராசிரியா் ராமதாஸ், முன்னாள் எம்எல்ஏ நடராஜன், மாநில நிா்வாகிகள் காசிநாதன், நந்தன், ஆனந்தன், மகாதேவி, நாகமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல, முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் முத்தியால்பேட்டையில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...