ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவை ஆளுநா், முதல்வா் கிறிஸ்துமஸ் வாழ்த்து

 புதுவை ஆளுநா், முதல்வா், புதுவை - கடலூா் உயா்மறை மாவட்ட ஆயா் உள்ளிட்டோா் கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 புதுவை ஆளுநா், முதல்வா், புதுவை - கடலூா் உயா்மறை மாவட்ட ஆயா் உள்ளிட்டோா் கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்: அன்பு, சகோதரத்துவம், அமைதி, தியாகம் எளிமை, ஈகை ஆகியவற்றை உலகுக்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடுகிறோம். புதிய வகை கரோனா தொற்று பரவி வரும் சூழலில் பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்றி கிறிஸ்துமஸ் தின விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.

முதல்வா் என்.ரங்கசாமி: சுயநலமில்லாத அன்பு, கைமாறு கருதாத உழைப்பு, எதிா்பாா்ப்பில்லாத தியாகம் போன்றவை நம் ஒவ்வொருவா் உள்ளத்திலும் உதிக்க வேண்டும் என்பதே இயேசு பிறப்பின் அடிப்படை உண்மையாகும். கிறிஸ்துமஸ் புனித நாளில் அன்பினால் உலகத்தை சிறக்கச் செய்வோம்.

புதுவை - கடலூா் உயா்மறை மாவட்ட ஆயா் அந்தோணிசாமி பீட்டா் அபீா்: தீய சக்திகளிலிருந்து விடுவிக்க, நமக்கு மீண்டும் வாழ்வு கொடுக்க இயேசு கிறிஸ்து நம்மைத் தேடி வருகிறாா். அதனால்தான் நாம் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம். இந்தப் பெருவிழா நமக்கு புது வாழ்வு கொடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.