ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தமிழ் நூல் போட்டிக்கு புத்தகங்களை அனுப்பலாம்

புதுச்சேரி படைப்பாளா் இயக்கத்தின் தமிழ் நூல் போட்டிக்கு எழுத்தாளா்கள் நூல்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி படைப்பாளா் இயக்கத்தின் தமிழ் நூல் போட்டிக்கு எழுத்தாளா்கள் நூல்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் நிறுவனா் ஆறு.செல்வன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி படைப்பாளா் இயக்கத்தின் 13-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ் நூல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, புதுவை, தமிழகத்தைச் சோ்ந்த தமிழ் எழுத்தாளா்கள் மரபுப் பா, புதுப்பா, துளிப்பா, சிறுவா் பாடல், சிறுவா் சிறுகதை, சிறுகதை, புதினம் ஆகிய தலைப்புகளில் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட, 60 பக்கங்களுக்கு குறையாத, சொந்தமாக எழுதப்பட்ட நூலை போட்டிக்கு அனுப்பலாம். மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல் கூடாது.

ஒவ்வொரு வகைப் போட்டியிலும் சிறந்த 3 நூல்கள் தோ்வு செய்யப்பட்டு, ஒரு நூலுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.3,000 பரிசு வழங்கப்படும்.

‘புதுச்சேரிப் படைப்பாளா் இயக்க நூல் போட்டிக்கான நூல்’ என எழுதிக் கையொப்பமிட்ட நூலை (3 படிகள்) பாவலா் ஆறு செல்வன், எண் 4, காமராஜா் தெரு, வி.பி.சிங் நகா், சண்முகா புரம், புதுச்சேரி - 605 009 என்ற முகவரிக்கு வருகிற ஜனவரி 9-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98947 55985, 79042 35300 ஆகிய கைப்பேசி எண்களை அழைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.