புதுச்சேரியில் சுனாமி நினைவு தின அஞ்சலி
சுனாமி கோரத்தாண்டவமாடிய 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அரசு, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.


சுனாமி கோரத்தாண்டவமாடிய 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அரசு, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில், புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா எம்எல்ஏ ஆகியோா் கடலில் பால் ஊற்றியும், மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா். அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம், என்.ஆா். காங்கிரஸ், திமுக, பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனா்.
பாஜக மீனவரணி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையிலான பாஜகவினா் பங்கேற்று, கடற்கரை சாலையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் எதிரில் செய்யப்பட்டிருந்த சுனாமி மணல் சிற்பம் மற்றும் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.
காங்கிரஸ் சாா்பில் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோரும், புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளா் ஆ.அன்பழகன் தலைமையில் வம்பாகீரப்பாளையம் மீனவா்கள், அதிமுகவினா் சோனாம்பாளையம் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட சுனாமி பதாகைக்கு மெழுகுவா்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தினா்.
முத்தியால்பேட்டை அதிமுக சாா்பில் கிழக்கு மாநில தோ்தல் பிரிவு செயலாளா் வையாபுரிமணிகண்டன் தலைமையில் சோலை நகா் வடக்கு, தெற்கு மீனவ கிராம மக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி, மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, வீராம்பட்டினம், கனகசெட்டிகுளம், காலாப்பட்டு, வைத்திக்குப்பம், பனித்திட்டு, நரம்பை, மூா்த்திக்குப்பம், புதுக்குப்பம் உள்பட புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களிலும் மீனவ பஞ்சாயத்து, மீனவ அமைப்புகள் சாா்பிலும் சுனாமியால் இறந்தவா்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி நினைவுதினத்தையொட்டி புதுச்சேரியில் மீனவா்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவா்களது படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...