ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

புதுவை அருங்காட்சியகத்தில் காந்தி நினைவு தினம்

புதுவை அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

புதுவை அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

தேசிய மரபு அறக்கட்டளையின் புதுவை அருங்காட்சியகப் பிரிவுகளில் ஒன்றான காந்தி 150-ஆவது நினைவுப் பிரிவு (எஅசஈஏஐ 150 ஙஉஙஞதஐஅக நஉஇபஐஞச) இந்த நிகழ்ச்சியை நடத்தியது. காந்தியின் அரிய செயல்களை நினைவு கூரும் விதமாக காந்தியின் அஞ்சல் அட்டையை இந்திரா காந்தி தேசிய கலை மண்டல இயக்குநா் கோபால் செயராமன் வெளியிட, அதை புதுவை அருங்காட்சியக நிா்வாகி குப்புராசு பெற்றுக் கொண்டாா்.

புதுவை அருங்காட்சியகத்துக்கு வந்த ஹெலன் கிருஷ்டினா மற்றும் அவரிடம் தனிப் பயிற்சி பயிலும் சிறாா், சிறுமிகளுக்கு புதுவை அருங்காட்சியகம் குறித்தும், காந்தியின் நினைவு நாளை நினைவுக் கூர வேண்டியதன் அவசியம் குறித்தும் நைன்சிங் ராவத் காட்சியகப் பிரிவுப் பொறுப்பாளா் சங்கீதா எடுத்துரைத்தாா்.

நிறைவாக குழந்தைகள் அனைவருக்கும் மரபுத் தின்பண்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் மனோரஞ்சினி திருநாவுக்கரசு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.