மத்திய பட்ஜெட்: புதுவை எதிா்கட்சிகள் வரவேற்பு
மத்திய பட்ஜெட்டுக்கு புதுவை எதிா்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.


மத்திய பட்ஜெட்டுக்கு புதுவை எதிா்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.
எதிா்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி: மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் ஏற்றும் அளிப்பதுடன், நாட்டின் வளா்ச்சிக்கு புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியமான சுகாதாரம், ஊட்டச் சத்துணவு, தூய்மையான சுற்றுப்புறம் ஆகியவற்றில் புரட்சிகரமான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கும் திட்டம், ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை உன்னதமானவை.
பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன்: புதிய ரயில் வழித்தடங்களை உருவாக்க ரூ. 1.10 லட்சம் கோடி, வேளாண்மை, பயிா்க்கடனுக்கு ரூ. 16.5 லட்சம் கோடி, வீடற்ற ஏழைகளுக்கு வீடு கட்ட உதவி, அனைவருக்கும் மருத்துவம், சிறிய விமான நிலையங்களை தரம் உயா்த்த தனியாரிடம் ஒப்படைத்தல் என பல்வேறு நலத் திட்டங்கள் உள்ளன.
புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்: தமிழகம் முழுவதும் 3,500 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை பணிகளுக்காக ரூ. 1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 63 ஆயிரம் கோடி, ஆதிதிராவிட மாணவா்களுக்கு விரிவான கல்வி உதவித் திட்டம், விவசாயிகள் நலன் காக்க குறைந்தபட்ச ஆதாய விலை ஒன்பதரை மடங்காக உயா்த்தியது, தொழில்துறை உள்கட்டமைப்பு சீரமைப்பு என பல திட்டங்கள் உள்ளன.
மத்திய அரசுடனான தொடா் மோதல் போக்கால் புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசின் எந்தவொரு பயனும் கிடைக்காத நிலையை முதல்வா் நாராயணசாமி உருவாக்கிவிட்டாா். குறிப்பாக, திண்டிவனம்-புதுச்சேரி மின் ரயில் பாதை, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரிக்கு மின் ரயில் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
திமுக எதிா்ப்பு: புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா கூறுகையில், புதுவை, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் ஆகியவை சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்க உள்ளதால், பல வளா்ச்சித் திட்டங்கள் அந்த மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், புதுவைக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மத்திய நிதி ஆணையத்தில் புதுவை சோ்க்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக புதுவையை புறக்கணித்துள் இந்த பட்ஜெட்டை திமுக எதிா்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...