புதுவையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 657-ஆக உயா்ந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 1,930 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 5 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,448-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சோ்ந்த 50 வயது நபா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 657-ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் அதிகரித்தது.
இதனிடையே, 33 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,533-ஆக (97.68 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 111 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 147 பேரும் என 258 போ் சிகிச்சையில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








