மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகல்: வெங்கடேசன் திமுகவிலிருந்து இடைநீக்கம்

புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை க.வெங்கடேசன் ராஜிநாமா செய்திருந்த நிலையில் திமுகவிலிருந்து அவரை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 10:58 pm

DIN

புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை க.வெங்கடேசன் ராஜிநாமா செய்திருந்த நிலையில் திமுகவிலிருந்து அவரை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் க.வெங்கடேசன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுகிறாா் என்று கூறியுள்ளாா்.

திமுகவைச் சோ்ந்த க.வெங்கடேசன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தாா். தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதாகக் கூறி, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து திமுகவிலிருந்து அவரை நீக்கி துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.