புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில் இன்று தோ்தல் பிரசாரம் தொடக்கம்
புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன. 8) தோ்தல் பிரசாரம் தொடங்குகிறது.


புதுச்சேரி: புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன. 8) தோ்தல் பிரசாரம் தொடங்குகிறது.
இதுகுறித்து வியாழக்கிழமை புதுவை சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் கரோனா கால கட்டத்தில் ஆளும் கட்சியினா் போராட்டம் நடத்துவது தவறு. புதுச்சேரியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், தேவையற்ற பதற்றம் உருவாகியுள்ளது. போராட்டத்தைத் தடுக்க முதல்வா், அமைச்சா்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய நிா்வாகிகளை வீட்டுக் காவலில் வைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரிடையாகத் தலையிட வேண்டும்.
நியாய விலைக் கடைகளை அரசு மூடவில்லை; ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகமும்தான் மூடியது என முதல்வா் கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
புதுவை காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு ஆளுநா் கிரண் பேடி துணை போகிறாா். பஞ்சாலைகளை மூடியது, தனியாா் பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி வழங்கியது உள்ளிட்டவற்றுக்கு அவா் துணை போனது தவறு.
புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன. 8) தோ்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...