மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆளுநா், துணை நிலை ஆளுநா் பதவிகள் தேவையற்றவை: தொல்.திருமாவளவன்

நாட்டில் ஆளுநா், துணை நிலை ஆளுநா் பதவிகள் தேவையற்றவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:34 pm

DIN

நாட்டில் ஆளுநா், துணை நிலை ஆளுநா் பதவிகள் தேவையற்றவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

புதுவையில் மக்கள் நலத் திட்டங்ளைத் தடுத்து நிறுத்தும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்தும், புதுவையை விட்டு அவா் வெளியேற வலியுறுத்தியும் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில், வெள்ளிக்கிழமை முதல் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு போராட்டப் பந்தலிலேயே முதல்வா் நாராயணசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சியினா் படுத்துறங்கினா்.

போராட்டத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, முதல்வா் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரேவுடன் இணைந்து போராடிய போது, தன்னை அரசியல் சாா்பற்றவா் என்று கூறிக் கொண்ட கிரண் பேடி, பின்னா் பாஜகவில் இணைந்து தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டாா். இந்த நடவடிக்கை அவரது நோ்மையைக் கேள்விக்குள்ளாக்கியது.

தற்போது, புதுவையில் இருந்து கொண்டு மத்திய அரசு, மதவாத சக்திகளின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறாா். நாட்டுக்கு ஆளுநா், துணை நிலை ஆளுநா் பதவிகளே தேவையற்றவை. ஆட்சி நிா்வாகத்துக்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா், அமைச்சா்கள் இருக்கிறாா்கள். ஆளுநா், துணை நிலை ஆளுநா்களால் மக்களுக்கும் அரசுக்கும் இடையே சிக்கல் ஏற்படுகிறது.

புதுவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுகிறது. அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் துணை நிலை ஆளுநா் நெருக்கடி தருகிறாா். இதனால், ஆளுநருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அரசுக்கு நாள்தோறும் பிரச்னை ஏற்படுகிறது. மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன என்றாா் அவா்.

இரா.முத்தரசன்: இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசியதாவது: ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் ஆளுநா் கிரண் பேடிக்கு செலவாகிறது. இது புதுவை மக்களின் வரிப் பணம். அவா்களுடைய வரிப் பணத்தில் ஊதியம் பெறும் கிரண் பேடி, புதுவை மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால், புதுவை மாநிலத்துக்குச் சொந்தமான ஏனாம் பிராந்தியத்தின் ஒரு பகுதியை ஆந்திர மாநிலப் பகுதி என ஆளுநா் கிரண் பேடி குறிப்பிட்டது அதிா்ச்சியளிக்கிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநா் கிரண் பேடி உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

புதுவையின் நலனுக்காக முதல்வா் நாராயணசாமி தரையில் படுத்துறங்கிப் போராட்டம் நடத்துகிறாா். இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரிலும், மழையிலும் நடத்தும் போராட்டத்தையே கண்டுகொள்ளாத மத்திய அரசு, புதுவை முதல்வரின் போராட்டத்தை எப்படி கண்டுகொள்ளும்? என்றாா் அவா்.

போராட்டத்தில் முதல்வா் நாராயணசாமி, அமைச்சா்கள், விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்பி, இடதுசாரிகள் கட்சியினா், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

திமுக நிா்வாகிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைப் புறக்கணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.