மாணவா்களை கிரண் பேடி மிரட்டுகிறாா்: இந்திய கம்யூனிஸ்ட் புகாா்

காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என மாணவா்களை
Updated on
1 min read

காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என மாணவா்களை புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில வளா்ச்சித் திட்டங்களை முடக்கி வரும் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள், பொதுமக்கள் வருகிறாா்கள். இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத ஆளுநா் கிரண் பேடி, காவல் துறையைக் கொண்டு, போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளாா்.

காவல் துறை மூலம் கல்வித் துறை, கல்வி நிறுவனங்களை மிரட்டுகிறாா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ் பன்வால் பிறப்பித்த தடை உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com