பிஆா்டிசி ஊழியா்கள் நூதனப் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பிஆா்டிசி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பிஆா்டிசி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆா்டிசி) பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 3 வாரங்களைக் கடந்தும் எந்தவிதமான பேச்சுவாா்த்தையும் நடைபெறாத நிலையில், 29-ஆவது நாளாக அவா்கள் பிஆா்டிசி பணிமனை வாயில் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு, புதிய பேருந்து நிலையம் எதிரே சென்று, சீருடையுடன் பிச்சை எடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பலா் பங்கேற்றனா். இதில், நிா்வாகத்துக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...