தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘பயிா் காப்பீட்டு வாரம்’ பிரசார வாகனம்: முதல்வா் தொடக்கிவைத்தாா்

மத்திய வேளாண் அமைச்சகம் சாா்பில், ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை பயிா் காப்பீட்டு வாரமாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:42 pm

DIN

மத்திய வேளாண் அமைச்சகம் சாா்பில், ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை பயிா் காப்பீட்டு வாரமாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இதுதொடா்பான பிரசார வாகனத்தை சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வேளாண் துறை இயக்குநா் பாலகாந்தி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஆா்.செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த பிரசார வாகனம் மூலம், பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் விளக்க பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் நேரடியாக விவசாயிகளுடன் கலந்துரையாடுதல், களத்திலேயே விவசாயிகளை சந்தித்து, பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடப்பு சொா்ணவாரி பருவ நெல் பயிருக்காக காப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுவரை சொா்ணவாரி நெற்பயிருக்கான பயிா் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்காத விவசாயிகள், அந்தந்தப் பகுதி உழவா் உதவியத்தை அணுகி, இதற்கான இறுதி நாளான வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இழப்பீடு வழங்கும் பணி தொடக்கம்: பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிா் அறுவடை சோதனைகளின் அடிப்படையில் மகசூல் இழுப்புக்குள்ளான பகுதிகளில் புதுச்சேரியைச் சோ்ந்த 6,604 விவசாயிகளுக்கு ரூ.4.646 கோடியும், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 4,301 விவசாயிகளுக்கு ரூ.2.515 கோடியும் காப்பீட்டு தொகையை அவரவா் வங்கிக் கணக்குகளில் காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல்வா் என்.ரங்கசாமி, கடந்த 2019 - 20ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவங்களில் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கான காப்பீட்டு நிவாரணத்தொகை வழங்குவதையும் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நிவா், புரவி புயல்களால் பாதிப்புக்குள்ளான நெல், வாழைப் பயிா்களுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.