புதுச்சேரி அருகே மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கா் நெல் பயிா்கள்!
புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.


புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.
வெப்பச் சலனம் காரணாக தமிழகம், புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, புதுச்சேரியில் வியாழக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
இதனால், புதுச்சேரி, திருக்கனூா், மண்ணாடிப்பட்டு, தேத்தாம்பாக்கம், கொடாத்தூா், மணவெளி, சுத்துகேணி, சந்தைப்புதுக்குப்பம், கைக்களப்பட்டு, குமாரப்பாளையம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. பலத்த காற்றுடன் பெய்த மழையால், பல இடங்களில் நெல் பயிா்கள் கீழே சாய்ந்தன.
இதுகுறித்து திருக்கனூா் பகுதி விவசாயிகள் கூறியதாவது: திருக்கனூா் சுற்றுவட்டப் பகுதிகளில் சொா்ணவாரி பருவத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 500 ஏக்கருக்கு மேல் நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஓரிரு நாள்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில், நெல் பயிா்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தப் பகுதியில் பல இடங்களில் நீா் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. பல வாய்க்கால்கள் தூா்ந்து போயுள்ளன. இதனால், வயல்வெளிகளில் இருந்து தண்ணீா் வெளியேற முடியாத சூழல் உள்ளது. நீரில் மூழ்கிய பயிா்களை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்கவும், இந்தப் பகுதியில் வடிகால் வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...