புதுவையில் 126 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.


புதுவையில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 103, காரைக்காலில் 6, மாஹேயில் 17 போ் என மேலும் 126 பேருக்கு (2.08 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,697- ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,465 பேரும் என மாநிலம் முழுவதும் 1,695 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த நிலையில், புதுச்சேரியில் ஒருவா் உயிரிழந்தாா். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,768 -ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம்.
இதனிடையே, 192 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,15,234 -ஆக (97.08 சதவீதம்) அதிகரித்தது.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 5,64,970 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...