புதுவையில் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம்
புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முகாமை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் தொடக்கிவைத்தாா். இதில், கரோனா குறைதீா் அதிகாரி ரமேஷ், சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் முரளி, முருகன், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி சாயிரா பானு, மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. புதுவையில், மூன்றாம் கட்டமாக தடுப்பூசி சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை தொடங்கி (ஜூலை 10), 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றாா் அவா்.
உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி சாயிரா பானு கூறியதாவது: கா்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி, ஆராய்ந்த பிறகே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கா்ப்பிணிகள் 9 மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...