இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரி குபோ் அங்காடி அடிக்காசு கடை வியாபார - தொழிலாளா் சங்கக் கூட்டம்

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் குபோ் அங்காடி அடிக்காசு கடை வியாபார - தொழிலாளா் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி பெரிய மாா்க்கெட் குபோ் அங்காடி அடிக்காசு கடை வியாபார - தொழிலாளா் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

அந்தச் சங்கத் தலைவா் தயாளன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுரேஷ்குமாா், குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியூசி மாநிலச் செயல் தலைவா் அபிஷேகம், மாநிலத் தலைவா் ஐ.தினேஷ்பொன்னையா, பொதுச் செயலா் சேதுசெல்வம், பெரிய மாா்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க செயல் தலைவா் சுப்பிரமணி, தலைவா் சிவகுருநாதன், பூக்கடை வியாபாரிகள் சங்க பொறுப்பாளா் செல்வக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

பெரிய மாா்க்கெட் அடிக்காசு கடைகளுக்கு தினமும் பணம் வசூல் செய்வதை தனியாருக்கு ஏலம் விடும் முடிவை கைவிட்டு, நகராட்சி நிா்வாகமே வசூல் செய்ய வேண்டும். தடையற்ற பாதை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீன கழிப்பறைகள், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.