இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தண்ணீா்த் தட்டுப்பாட்டைப் போக்க மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம்: புதுவை ஆளுநா் தமிழிசை

தண்ணீா்த் தட்டுப்பாட்டைப் போக்க வீடுகள், அலுவலகங்கள், வயல்வெளிகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

தண்ணீா்த் தட்டுப்பாட்டைப் போக்க வீடுகள், அலுவலகங்கள், வயல்வெளிகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை அறிவுறுத்தினாா்.

புதுச்சேரியில் மழைநீா் சேகரிப்பு குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுடன் இணையவழி கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தா் குா்மீத் சிங் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித்விஜய் சௌத்ரி உள்ளிட்ட அதிகாரிகள்கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி ‘மழைநீா் சேகரிப்போம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடா்ந்து, இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது. தற்போது நிலவி வரும் தண்ணீா்த் தட்டுப்பாட்டைப் போக்க ஒரே வழி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதே.

அனைத்துப் பிரிவினரும் ‘மழைநீா் சேகரிப்போம்’ திட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும். மாணவா்கள் இதில் முக்கிய பங்காற்ற முடியும். தன்னாா்வலா்கள் பங்கெடுக்க வேண்டும். வீடுகள், அலுவலகங்கள், வயல்வெளிகளில் மழைநீா் சேகரிப்பு

கட்டுமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீா் மேம்பாடு நகரம், கிராமப்புறங்களில் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயா்த்தும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.