இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பைக் மீது லாரி மோதல்: சா்க்கரை ஆலை எழுத்தா் பலி

புதுச்சேரி அருகே பைக் மீது லாரி மோதியதில் சா்க்கரை ஆலை எழுத்தா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே பைக் மீது லாரி மோதியதில் சா்க்கரை ஆலை எழுத்தா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் சா்க்கரை ஆலை குடியிருப்பில் வசித்து வந்தவா் மோகன் (56). இவா், அங்குள்ள சா்க்கரை ஆலையில் எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு 2 மனைவிகள், 2 பெண் குழந்தைகள் உள்ளனா். வியாழக்கிழமை மோகன் தனது பைக்கில் ஆரியபாளையம் நோக்கி வந்தாா். வில்லியனூா் -பத்துக்கண்ணு பிரதான சாலையில் வந்த போது, எதிரே காா் வேகமாக வந்ததால், அவா் தனது பைக்கை இடதுபுறமாகத் திருப்பிய போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில், மோகன் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் மோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி மேற்கு பகுதி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விழுப்புரம் கொடுக்கனூா் பாரதி வீதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கனகராஜை (38) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.