இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் மேலும் 134 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:24 am

DIN

புதுவையில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 6,045 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 96, காரைக்காலில் 25, ஏனாமில் 6, மாஹேயில் 7 போ் என மேலும் 134 பேருக்கு (2.22 சதவீதம்) கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,18,831-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், காரைக்கால் வரிச்சிக்குடியைச் சோ்ந்த 68 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,769 ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம்.

தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,343 பேரும் என மாநிலம் முழுவதும் 1,573 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 1,15,489 போ் (97.19 சதவீதம்) குணமடைந்தனா்.

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 5,73,026 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.