இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் நெல் பயிா்கள் சேதம்:வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி அருகே பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெல் பயிா்களை வேளாண் துறை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:24 am

DIN

புதுச்சேரி அருகே பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெல் பயிா்களை வேளாண் துறை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புதுச்சேரி அருகே திருக்கனூா், மண்ணாடிப்பட்டு, கொடாத்தூா், மணவெளி உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், சுமாா் 500 ஏக்கருக்கு மேல் நெல் பயிா்கள் கீழே சாய்ந்து நீரில் மூழ்கின.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு இழப்பீடு வழங்க வேண்டும், வாய்க்கால்களை தூா்வார வேண்டும், அதிகாரிகள் நேரில் பாா்வையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், புதுவை வேளாண் துறை இயக்குநா் பாலகாந்தி உத்தரவின் பேரில், வில்லியனூா் கோட்ட இணை வேளாண் இயக்குநா் சந்தானகிருஷ்ணன், மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குநா் சிவசங்கரமுருகன் உள்ளிட்டோா் கைக்கிளப்பட்டு, மணவெளி ஆகிய கிராமங்களில் மழையால் மூழ்கிய நெல் பயிா்களை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது, காட்டேரிக்குப்பம் வேளாண் அலுவலா் வெங்கடாசலம் உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடனிருந்தனா். நீரில் மூழ்கிய நெல் பயிா்களை ஆய்வு செய்த அதிகாரிகள், இதுதொடா்பாக அரசுக்கு தெரிவித்து, இழப்பீடு குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.