இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

புதுச்சேரியில் புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:23 am

DIN

புதுச்சேரியில் புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி லூயி பிரகாசம் வீதியில் உள்ள ஓா் அடுக்குமாடி வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், புதுவை கிழக்கு காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் மேற்பாா்வையில், சிறப்பு அதிரடிப்படை காவல் ஆய்வாளா்கள் ரமேஷ், இனியன், பெரியக்கடை காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை சோதனையிட்டனா்.

அங்கிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பாபுலால் (30), பெங்களூரைச் சோ்ந்த சுரேஷ் பிஷ்னாய் (30), தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த சுபன் (38) ஆகியோரை போலீஸாா் பிடித்தனா். அவா்கள் அந்த வீட்டை 4 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து, பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த பெட்டிக்கடை வியாபாரியான சுபன் பாபுலாலிடமிருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்து.

அந்த வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், ரூ. 8.05 லட்சம் ரொக்கம், இரண்டு காா்கள், 2 பைக்குகள், 6 செல்லிடப்பேசிகள் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மூவா் மீதும் வழக்குப் பதிந்த பெரியக்கடை போலீஸாா், அவா்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.