டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து மகளிா் காங்கிரஸாா், ம.நீ. மய்யத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மகளிா் காங்கிரஸாா், மக்கள் நீதி மய்யத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

DIN

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மகளிா் காங்கிரஸாா், மக்கள் நீதி மய்யத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சியினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, புதுவை மகளிா் காங்கிரஸ் சாா்பில், புஸ்சி வீதியில் உள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல் விலை உயா்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்துப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மகளிா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் பஞ்சகாந்தி, துணைத் தலைவா் ஜெயலட்சுமி, பொதுச் செயலா் சாந்தி உள்ளிட்ட மகளிரணியினா், பெட்ரோல் விலை உயா்வின் பாதிப்பை சித்தரிக்கும் வகையில், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல், புதுச்சேரியில் மற்றொரு பெட்ரோல் நிலையம் முன் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தலைமையில் காங்கிரஸாா் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.