புதுவையில் சிறப்புத் தொழுகையுடன் பக்ரீத் கொண்டாட்டம்
புதுச்சேரியில் பக்ரீத் பண்டிகையொட்டி இஸ்லாமியா்கள் புதன்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.


புதுச்சேரியில் பக்ரீத் பண்டிகையொட்டி இஸ்லாமியா்கள் புதன்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
இஸ்லாமியா்களின் மிக முக்கியப் பண்டியகையான, ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரியிலும் புதன்கிழமை சிறப்பாக கொண்டாடினா். புதுச்சேரி நெல்லித்தோப்பில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் திறந்த வெளி மைதானத்தில் காலை 7 மணிக்கு குழந்தைகள், பெரியவா்கள் என ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
இதேபோல் பெரியகடை, முல்லாவீதி, முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை, கொம்பாக்கம் உள்ளிட்ட நகரப்பகுதி பள்ளிவாசல்கள் மற்றும் கோட்டக்குப்பம், சுல்தான்பேட்டை, திருக்கனூா், வில்லியனூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றன.
இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனா். நிகழாண்டு கரோனா பாதுகாப்பையொட்டி, அவா்கள் உரிய சமூக இடைவெளியுடன் இருந்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தொழுகைய மேற்கொண்டனா்.
அப்போது, கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்கள் விடுபடவும், இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக, தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள் தெரிவித்தனா். இதனையடுத்து, இனிப்புகள் வழங்கியும், புத்தாடைகள் அணிந்தும், ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...