புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி
புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.


புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி - 59, காரைக்கால் - 3, ஏனாம் - 3, மாஹே - 3 போ் என புதிதாக மொத்தம் 68 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,20,003-ஆக உயா்ந்தது.
இதனிடையில், புதுச்சேரியில் ஒருவா், மாஹேவில் ஒருவா் என 2 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,783-ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் அதிகரித்தது.
இதனிடையே, 72 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,17,265-ஆக உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 147 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 808 பேரும் என மொத்தம் 955 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...