அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பெகாஸஸ் உளவு விவகாரம்: புதுச்சேரியில் ஆளுநா் மாளிகை நோக்கி காங். கண்டனப் பேரணி

புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகம் அருகே ஆம்பூா் சாலையில் பேரணியாக வந்த காங்கிரஸாரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:37 pm

DIN

புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகம் அருகே ஆம்பூா் சாலையில் பேரணியாக வந்த காங்கிரஸாரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

புதுச்சேரி, ஜூலை 22: பெகாஸஸ் உளவு விவகாரத்தைக் கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய பாஜக அரசின் முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் நீதி விசாரணை நடத்தக் கோரியும் புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் ஆளுநா் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், புதுச்சேரி காமராஜா் சிலை அருகிலிருந்து பேரணியாக புறப்பட்ட காங்கிரஸாா், நேரு வீதி வழியாக புதுச்சேரி ஆளுநா் மாளிகையை நோக்கி கண்டன முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

அவா்களை சட்டப் பேரவை அலுவலகம் அருகே ஆம்பூா் சாலையில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, காங்கிரஸாா் அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் பேசியதாவது:

நாட்டில் உள்ள எதிா்க்கட்சித் தலைவா்கள், ராணுவ அதிகாரிகள், அமைச்சா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோரின் தொலைபேசியை பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பாா்த்த விவகாரம் தேச துரோகச் செயலாகும். இந்த நிகழ்வு கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே நடந்திருப்பதாகச் சொல்லப்படுவதால், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததிலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கும் நமது நாட்டின் ரகசியங்கள் கசிந்திருக்கலாம்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய்க்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினா் பதவியை வழங்கிய நிலையில், அவா் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய பெண்மணியின் செல்லிடப்பேசியும் உளவு பாா்க்கப்பட்டிருப்பதால், பாஜகதான் இந்த உளவு வேளையில் ஈடுபட்டிருக்கலாமெனத் தெரிகிறது.

எனவே, பெகாஸஸ் உளவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று பிரதமா் மோடி, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பதவி விலக வேண்டும். இந்த முறைகேடு தொடா்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

பேரணியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மு.வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத், மாநில துணைத் தலைவா்கள் பி.கே.தேவதாஸ், பெத்தபெருமாள், முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன், சிறப்பு அழைப்பாளா் சுந்தரவடிவேலு, பொதுச் செயலா்கள் தனுசு, கருணாநிதி, அப்துல்ரக்மான், மகளிரணித் தலைவா் பஞ்சகாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.