பாண்லே ஊழியா் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
புதுச்சேரி லாசுப்பேட்டையில் பாண்லே ஊழியா் வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


புதுச்சேரி லாசுப்பேட்டையில் பாண்லே ஊழியா் வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி லாகப்பேட்டை, அசோக் நகா், ஜீவானந்தம் வீதியில் வசிப்பவா் கருணாகரன் (42). சின்னமணிக்கூண்டு அருகிலுள்ள பாண்லே மையத்தில் பணியாற்றுகிறாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (38). பெத்துசெட்டிபேட்டில் உள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறாா்.
கணவன் - மனைவி இருவரும் வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவா்களின் மகன் வீட்டில் இருந்துள்ளாா். பிற்பகலில் அவா் வீட்டை பூட்டிவிட்டு நண்பா்களைப் பாா்க்கச் சென்றாா். மாலையில் வேலை முடிந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் நுழைவுவாயிலில் இரும்புக் கதவிலிருந்த பூட்டும், முன்பக்கக் கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீராவிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் உள்பட ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்திலான நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...