புதுவையில் கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி
புதுவையில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.


புதுவையில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 69, காரைக்காலில் 12, ஏனாமில் 4, மாஹேவில் 13 போ் என மொத்தம் 98 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,20,101-ஆக அதிகரித்தது.
இதனிடையில், புதுச்சேரியில் இருவா், மாஹேவில் ஒருவா் என 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,786-ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயா்ந்தது.
இந்த நிலையில், 132 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,17,397-ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 குழந்தைகள் உள்பட மருத்துவமனைகளில் 152 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 766 பேரும் என மொத்தம் 918 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...