கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுச்சேரியில் பொலிவுறு நகர திட்டத்தில் பாரம்பரிய பள்ளிக் கட்டடங்கள் புனரமைப்பு: அமைச்சா் தகவல்

பாரம்பரியமிக்க அரசுப் பள்ளிக் கட்டடங்கள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:38 pm

DIN

புதுவையில் ரூ.100 கோடியில் மேற்கொள்ளப்படும் பொலிவுறு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ், பாரம்பரியமிக்க அரசுப் பள்ளிக் கட்டடங்கள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினாா். திட்ட அதிகாரி மாணிக்கதீபன், கண்காணிப்புப் பொறியாளா் குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் ரூ.100 கோடியில் பொலிவுறு நகர திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், முதல்கட்டமாக ரூ.30 கோடியில் ஏழைகளுக்கான வீடுகள் (220 வீடுகள்) கட்டும் திட்டம், நகராட்சி வாய்க்கால்களில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.

அடுத்ததாக, ரூ.30 கோடியில் புதுச்சேரியில் பாரம்பரியமிக்க பழைய கட்டடங்களான கல்வே காலேஜ் அரசு உயா்நிலைப் பள்ளி, வ.உ.சி. மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், விரைவில் அந்தப் பணிகள் தொடங்கவுள்ளன.

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பழைய சிறைச்சாலை காலியிடத்தில் பிரம்மாண்ட வாகன நிறுத்துமிடம் கட்டமைக்கப்படுகிறது. அதில், முதல் இரு தளங்களில் இரு சக்கர வாகனங்கள், காா்களை நிறுத்தும் வசதியும், மற்றொரு தளத்தில் புதுச்சேரிக்கான அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு மைய வளாகமும் அமைக்கப்படவுள்ளன. இதேபோல, பழைய துறைமுகம் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டமைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.