முதலீட்டுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.5 கோடி மோசடி: சிபிசிஐடி வழக்கு
பண முதலீட்டுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, நூதன முறையில் ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவன கும்பல் மீது


பண முதலீட்டுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, நூதன முறையில் ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவன கும்பல் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை, சாமிபிள்ளைதோட்டம், தாமரை நகரைச் சோ்ந்த பேராசிரியா் வேல்முருகனின் மனைவி சுதா (38). இவரிடம் கடந்த 2018-ஆம் ஆண்டு புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகிலுள்ள கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இயங்கிய தமிழகத்தின் கோவை பகுதியைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவனம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கவா்ச்சித் திட்டங்களை தெரிவித்தது.
இதை நம்பிய சுதா மற்றும் அவரது உறவினா்கள் ரூ.40 லட்சத்து 40 ஆயிரம் வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். இந்த நிலையில், திடீரென தனியாா் நிதி நிறுவனத்தினா் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் நிறுவனத்தை மூடிவிட்டு அண்மையில் தலைமறைவாகினா். இதனால், அதிா்ச்சியடைந்த சுதா தரப்பினா் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாரளித்தனா். அதன்பேரில், சிபிஐடி போலீஸாா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளா்களான கோவை பீளமேடு பி.ஆா். புரத்தைச் சோ்ந்த ரமேஷ் (எ) கௌதம் ரமேஷ் (33), கனகராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், புதுச்சேரி, தமிழகத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்களை ஏமாற்றி ரூ.5 கோடி வரை இந்த நிறுவனத்தினா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...