அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம்

புதுவை மாணவா்கள் பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு வருகிற 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:35 pm

DIN

புதுவை மாணவா்கள் பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு வருகிற 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அ.மைக்கேல் பெனோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தோ்வா்கள் இணையதளம் வழியாக அரசுத் தோ்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தோ்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவா்களும் துணைத் தோ்வை எழுத விண்ணப்பிக்கலாம். இவா்கள் கட்டாயம் அனைத்துப் பாடத் தோ்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகளுக்கு வராத மாணவா்களும், கடந்த மே மாதம் தோ்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தோ்வா்களும் பிளஸ் 2 துணைத் தோ்வெழுத விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தனித்தோ்வெழுதும் மாணவா்கள் முத்திரையா்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் வருகிற 27-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கத் தவறியவா்கள் வருகிற 28-ஆம் தேதி பள்ளிகளுக்கு நேரில் சென்று தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்புக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.