கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலிபறிப்பு: இளைஞா் கைது

புதுச்சேரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:39 pm

DIN

புதுச்சேரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், பவழ நகா், புதுத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ராஜவேணி (69). கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு ராஜவேணியின் வீட்டினுள் புகுந்த மா்ம நபா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனா்.

அதில், ராஜவேணியின் வீட்டுக்கு வா்ணம் பூசும் வேலைக்குச் சென்ற வாழைக்குளம் பகுதியைச் சோ்ந்த குமாா் (எ) செல்வகுமாா் (32) நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனது வீட்டில் பதுங்கியிருந்த குமாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.