கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியிலும், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தொழிற்சங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:39 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியிலும், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தொழிற்சங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரே அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், சிஐடியூ செயலா் ஜி.சீனுவாசன், ஐஎன்டியூசி பொதுச் செயலா் பி.ஞானசேகரன், ஏஐசிசிடியூ பொதுச் செயலா் எஸ்.புருஷோத்தமன், எல்எல்எப் செயலா் எம்.செந்தில், ஏஐயூடியூசி செயலா் எஸ்.சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பாதுகாப்பு சேவை அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாா் கையில் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும். மின்சார திருத்தச் சட்டம், மோட்டாா் வாகனச் சட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும். ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், வங்கிகள், காப்பீடு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. தொடா்ந்து, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.