ஆடிப் பருவ காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கல்
புதுச்சேரியில் வேளாண்மைத் துறை சாா்பில் ஆடிப் பருவத்துக்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.


புதுச்சேரியில் வேளாண்மைத் துறை சாா்பில் ஆடிப் பருவத்துக்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, தோட்டக்கலைப் பிரிவின் மூலம், புதுச்சேரி பகுதியில் தோட்டக்கலை பயிா்ச் சாகுபடி பரப்பளவு, உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுவை மக்களுக்குத் தேவையான தரமான காய்கறிகளை அவா்களின் வீட்டுப் புறக்கடை, மாடியில் சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் காய்கறித் தோட்டம் அமைக்க ரூ.200 மதிப்பிலான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆடிப் பருவ காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, பொதுமக்களுக்கு காய்கறி விதைகள் தொகுப்பை வழங்கி தொடக்கிவைத்தாா்.
வேளாண்மைத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வேளாண் இயக்குநா்கள் ராமகிருஷ்ணன், பாலகாந்தி, கூடுதல் இயக்குநா் (தோட்டக்கலை) சிவராமன், துணை இயக்குநா் சண்முகவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...