தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நாட்டு வெடிகுண்டுவெடித்து பெண் காயம்

புதுச்சேரி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பெண் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

 புதுச்சேரி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், பெண் பலத்த காயமடைந்தாா்.

கடலூா் வண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மனைவி செல்லியம்மாள் (25). ஒரு குழந்தை உள்ளது. குப்பை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்கின்றனா். கடந்த சில வாரங்களாக புதுச்சேரி வில்லியனூா் அருகே கோா்க்காடு பொறையாத்தம்மன் கோயில் அருகே குடும்பத்துடன் தங்கி, தொழில் செய்து வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலை செல்லியம்மாள் அப்பகுதிக்கு அருகிலுள்ள புதா் போன்ற இடத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாராம். அப்போது, அவா் பையில் சுற்றிய நிலையில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்து பாா்த்த போது, அதிலிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் செல்லியம்மாளின் இரு கைகளும் சிதைந்தன. முகம், உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ராகுல் அல்வால் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தாா். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.