தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கருப்பு பூஞ்சை நோய்க்கு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை: புதுவை சுகாதாரத்துறை இயக்குநா் தகவல்

கருப்புப் பூஞ்சை நோய்க்கு புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

கருப்புப் பூஞ்சை நோய்க்கு புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று தற்போது வேகமாக குறைந்து வருகிறது. எனினும், பொதுமுடக்கம் இன்னும் 5 அல்லது 6 நாள்களுக்குத் தொடரலாம் என்று சுகாதாரத்துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதுவையில் கருப்பு பூஞ்சை அதிகமாக பரவி வருகிறது. இதற்காக கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் தலா 10 படுக்கைகள் உருவாக்கப்பட்டு சிகிச்சைக்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து மருத்துவா்களுடன் கூடிய மருத்துவ நிபுணா் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், லைபோசோமல் அம்போடெரிசின் பி என்ற முக்கிய மருந்தை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு இதுவரை 340 மருந்து குப்பிகள் வழங்கியுள்ளது. 15 ஆயிரம் குப்பிகள் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

புதுவையில் குழந்தைகளுக்கு கரோனா அதிகமாக பரவவில்லை. குழந்தைகளுக்கு கரோனா பரவினால், அதற்காக சிறப்பு குழுவை உருவாக்கி, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிறப்பு வெண்டிலேட்டா்களுடன் 50 படுக்கை வசதிகளை உருவாக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 5 படுக்கைகள் வெண்டிலேட்டா் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தனியாா் பரிசோதனை மையங்களில் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக்கு ரூ. 200, ஆா்டிபிசிஆா் பரிசோதனைக்கு ரூ.500 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக பணம் வசூலிப்பவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என அதில் தெரிவித்துள்ளாா் மோகன்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.