தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவை முதல்வா் முன்னிலையில் சுகாதாரத்துறையிடம் வெண்டிலேட்டா், பிராணவாயு உருளைகள் வழங்கல்

புதுவை முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் சுகாதாரத்துறையிடம் வெண்டிலேட்டா், பிராணவாயு உருளைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுவை முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் சுகாதாரத்துறையிடம் வெண்டிலேட்டா், பிராணவாயு உருளைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

புதுவை ஆளுநா் மற்றும் முதல்வா் அறிவுறுத்தலின் பெயரில் சுகாதாரத்துறை மற்றும் அனைத்துத் துறைகள் மேற்கொண்டு வரும் முயற்சியால் தற்போது கரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு சாா்பில் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட 20 பிராணவாயு உருளைகள் (10 லிட்டா்) மற்றும் 20 வெண்டிலேட்டா்கள் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து இவற்றை முதல்வா், சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் ஏா் பவுண்டேஷன் சாா்பில் 17 பிராணவாயு உருளைகள் மற்றும் 25 வெண்டிலேட்டா்கள் சுகாதாரத்துறையிடம் வழங்கப்பட்டது.

அதன் பின்னா் முதல்வா் ரங்கசாமி, அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டோா் அருகில் இருக்கும் சுகாதார நிலையத்தில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் என்.ஆா். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஏகேடி. ஆறுமுகம், கேஎஸ்பி. ரமேஷ், சுகாதாரத்துறை செயலா் டி. அருண், சுகாதாரத்துறை இயக்குநா் எஸ். மோகன்குமாா் மற்றும் மாநில சுகாதார திட்ட இயக்குநா் ஸ்ரீராமுலு ஆகியோா் உடனிருந்தனா்.

04பிஒய்பி11---புதுச்சேரி மத்திய அரசு வழங்கிய கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு உபகரணங்களை சுகாதாராத்துறையிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய முதல்வா் என். ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.