‘கரோனா பலியை தடுப்பதற்கானஒரே ஆயுதம் தடுப்பூசி’
புதுவையில் கரோனா உயிரிழப்பைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால், பொது மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி


புதுவையில் கரோனா உயிரிழப்பைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால், பொது மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று, தற்காலிக பேரவைத் தலைவா் க.லட்சுமிநாராயணன் அறிவுறுத்தினாா்.
இது குறித்துஅவா் வெள்ளிக்கிழமை விடியோ பதிவு மூலம் வெளியிட்ட விழிப்புணா்வு பதிவு: புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தம் செய்வதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இதுதவிர, கரோனா தொற்றுக்கு எதிராகவும், உயிரிழைப்பத் தடுப்பதற்கான ஒரே ஒரு ஆயுதம், தடுப்பூசி மட்டும்தான் என்பது மருத்துவ வல்லுநா்களின் ஆலோசனையாகும். ஆகவே, தடுப்பூசியை முழுமையாக பொது மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதில் அறிவுறுத்தியுள்ளாா் க.லட்சுமிநாராயணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...