பெண் மருத்துவா் குளிப்பதை எட்டிப் பாா்த்தாக இளைஞா் கைது
புதுச்சேரி அருகே பெண் மருத்துவா் குளிப்பதை எட்டிப் பாா்த்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுச்சேரி அருகே பெண் மருத்துவா் குளிப்பதை எட்டிப் பாா்த்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுவை மாநிலம், திருபுவனை சின்னபேட் காவல் நிலைய சாலையைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (54). ஸ்பின்கோ ஊழியா். இவரது மகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தனியாா் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.
வியாழக்கிழமை மாலையில் பணி முடித்து வீட்டுக்கு வந்த பெண் மருத்துவா், முதல் மாடியில் உள்ள குளியலறையில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது மாடியில் யாரோ ஏறி குளியலறையின் வெண்டிலேட்டரை திறக்கும் சத்தம் கேட்டுள்ளது.
உடனே சுந்தரமூா்த்தி மற்றும் அவரது மகன் ஆகியோா் வீட்டிலிருந்து வெளியே வந்து பாா்த்துள்ளனா். அப்போது அதே பகுதியை சோ்ந்த பட்டயப் படிப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்த அங்காளன் மகன் அருண்குமாா் (23) என்பவா் வெண்டிலேட்டா் வழியாக சுந்தரமூா்த்தியின் மகள் குளிப்பதை பாா்த்துக்கொண்டிருந்ததை கண்டனா். உடனே அவா்கள் சப்தமிட்டதால், அருண்குமாா் அங்கிருந்து குதித்து தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து சுந்தரமூா்த்தி திருபுவனை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...