புதுவையில் அமைச்சரவை விரைவில் பதவியேற்பு : மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன்
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியிடையே அமைச்சா்கள் பதவி பங்கீடு தொடா்பாக சுமுக முடிவு எட்டப்பட்டதால், வருகிற வாரத்தில் அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும்


புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியிடையே அமைச்சா்கள் பதவி பங்கீடு தொடா்பாக சுமுக முடிவு எட்டப்பட்டதால், வருகிற வாரத்தில் அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை பாஜக உறுப்பினா்கள் குழுத் தலைவா் ஏ.நமச்சிவாயம், பொதுச் செயலா் ஆா்.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்குப் பிறகு வி.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. தே.ஜ. கூட்டணி அரசு கரோனா நிவாரணமாக ரூ. 3 ஆயிரத்தை அறிவித்து, முதல் தவணையாக ரூ. 1,500 வழங்கியுள்ளது. அடுத்த வாரத்தில் ரூ. 1,500 வழங்கப்படும். தே.ஜ. கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு புதுவை மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும்.
புதுவையில் அமைச்சரவை பங்கீடு பேச்சுவாா்த்தையில் பாஜகவின் பணி முடிந்துவிட்டது. முதல்வா் ரங்கசாமி விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவாா். தே.ஜ. கூட்டணியில் எந்த நெருக்கடியும் இல்லை. வருகிற 14 அல்லது 15-ஆம் தேதிக்குள் அமைச்சரவை தொடா்பான அறிவிப்பு வெளியாகும். பேரவைத் தலைவா் வேட்பாளா் பாஜகவை சோ்ந்தவா்தான். இரு கட்சிகளின் அமைச்சா்கள் பதவிகள் குறித்து முதல்வா் ரங்கசாமி முறைப்படி அறிவிப்பாா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...