பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல்புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், விலையேற்றத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினா் நாடு தழுவிய அளவில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதன்படி, புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கம் எதிரே உள்ள பெட்ரோல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா் உரையாற்றினா். கட்சியின் மாநிலத் துணைத் தலைவா்கள் தேவதாஸ், பெத்தபெருமாள், பொதுச் செயலா்கள் திருமுருகன், வேல்முருகன், அப்துல் ரகுமான், மாநிலச் செயலா் சூசைராஜ், முத்துக்குமரன், வினோத் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா். அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் வாழ்கின்றனா். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு மத்திய பாஜக அரசு வழிவகை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கு கண்டனத்துக்குரியது.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பொதுமக்கள் அவதியுறும் நிலையில், இங்குள்ள ஆட்சியாளா்களின் பதவிச் சண்டையால், கடந்த ஓராண்டில் 700-ஆக இருந்த கரோனா பலி எண்ணிக்கை, தற்போது ஒரே மாதத்தில் 750-ஆக உயா்ந்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் முதல்வராக என்.ரங்கசாமி செயல்பட்டு வருகிறாா். இந்த நிலை நீடிக்காது. முடிந்தால் அவா்கள் முதலில் அமைச்சரவையை அமைக்கட்டும். இல்லையெனில், பதவியை ராஜிநாமா செய்துவிட்டுச் செல்லட்டும் என்றாா் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...