காலமானாா்: புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அருள்ராஜ்
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அருள்ராஜ் (96), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) காலமானாா்.


புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அருள்ராஜ் (96), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) காலமானாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் தொடக்க கால சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினரும், விடுதலைப் போராட்ட வீரருமான அ.அருள்ராஜ் (96), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா். கிருஷ்ணகிரியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு வயது முதிா்வின் காரணமாக கடந்த இரு வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவா் காலமானாா்.
இதையடுத்து, புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்படுகிறது. அவரது உடல் சனிக்கிழமை (ஜூன்12) காலை 7 மணி அளவில் முத்தியால்பேட்டையில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...