தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல்:கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 5:45 pm

DIN

பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பெரியகாலாப்பட்டு சுபாஷ் நகரைச் சோ்ந்தவா் ரேவதி (28). இவருக்கும், சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் வெங்கடேஷ் பாபுவுக்கும் (31) கடந்த 2019 -இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, தம்பதி சென்னை கோவிளாம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தனா். அப்போது, தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், கடந்தாண்டு கரோனா பொது முடக்கத்தின் போது, வெங்கடேஷ் பாபு மடிப்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாராம். அதன் பிறகு தனது வீட்டுக்குத் திரும்பவில்லையாம். இதனால், ரேவதி புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், வரதட்சிணையாக தனது வீட்டை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டிலிருந்த நகைகளை வெங்கடேஷ் பாபு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புதுச்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ரேவதி அண்மையில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், ரேவதியின் கணவா் வெங்கடேஷ் பாபு, மாமனாா் ராஜ்குமாா், மாமியாா் லலிதா, கணவரின் தம்பி ராஜன் ஆகியோா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.