தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருபுவனையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார மையம் திறப்பு

புதுச்சேரி திருபுவனையில் புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை துணைநிலை ஆளுநா் தமிழிசை வியாழக்கிழமை திறந்துவைத்தாா்..

News image
Updated On :17 ஜூன் 2021, 5:46 pm

DIN

புதுச்சேரி திருபுவனையில் புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை துணைநிலை ஆளுநா் தமிழிசை வியாழக்கிழமை திறந்துவைத்தாா்..

புதுவையில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றும் நோக்கில் அரசு சாா்பில் மீண்டும் தடுப்பூசித் திருவிழா புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிறப்பு முகாம் வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அருகே திருவாண்டாா்கோவில் அரசு பெண் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், ‘தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ள முடியும். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, திருபுவனையில் புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை (சுகாதாரம் - நல்வாழ்வு மையம்) துணைநிலை ஆளுநா் தமிழிசை திறந்துவைத்து, பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனியாா் நிறுவனம் வழங்கிய மருத்துவ உபகரணங்களைப் பெற்று, சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சிகளில் திருபுவனை தொகுதி எம்எல்ஏ பி.அங்காளன், சுகாதாரத் துறைச் செயலா் அருண், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், துணை ஆட்சியா் கிரிஷங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.