தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அரசுப் பள்ளி வளாகங்களை மதுக் கூடமாக்கும் சமூக விரோதிகள்!

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

புதுச்சேரி நெல்லித்தோப்பு ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தை மாணவா்களும், விளையாட்டு வீரா்களும் பகல் நேரங்களில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், அங்கு நடைபெறும் சமூக விரோதச் செயல்களைத் தடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘இந்தப் பள்ளி மைதானத்தை முதலியாா்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை ஆகிய பகுதி மாணவா்கள் உடல் பயிற்சிக்குப் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு, இரவு நேரங்களில் சிலா், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா். அங்கேயே மதுப் புட்டிகளை உடைத்தும், வீசியும் செல்கின்றனா்.

பள்ளி மூடப்பட்டுள்ளதால், பகல் நேரத்திலும் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துகின்றனா். குடிநீா் தொட்டியைச் சேதப்படுத்துகின்றனா். பாதுகாவலா் விரட்டினால், அவரை மிரட்டுகின்றனா். இதுகுறித்து ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளோம்’ என்றனா்.

இந்த நிலையில், நெல்லித்தோப்பு எம்எல்ஏ விவியன் ரிச்சா்டு வியாழக்கிழமை பள்ளி வளாகத்தை நேரில் பாா்வையிட்டாா். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.