தொழிலாளி தற்கொலை
புதுச்சேரியில் கட்டுமானத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியில் கட்டுமானத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி பாகூா் அருகே குருவிநத்தம் மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (24). கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 6 ஆண்டுகளாக பெண் ஒருவரைக் காலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண், கடந்த சில நாள்களுக்கு முன் திடீரென வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டாராம்.
இதனால், வேதனையடைந்த ராஜேஷ், புதன்கிழமை முத்தியால்பேட்டையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது, யாருமில்லாத நேரத்தில் கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது அண்ணன் ராஜபிரகாஷ் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...